மாணவர் கற்றல் அடைவு ஆய்வு (SLAS) மாதிரித் தேர்வை நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்! - EDUNTZ

Latest

Search Here!

الخميس، 9 يناير 2025

மாணவர் கற்றல் அடைவு ஆய்வு (SLAS) மாதிரித் தேர்வை நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!

மாநில திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்கள் துறைத்தலைவர்களுக்கான 06.01.2025 கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள். மாநில கற்றல் அடைவு ஆய்வு (SLAS) அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேனிலைப்பள்ளிகளிலுள்ள 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 04.02.2025 முதல் 06.02.2025 வரை நடத்தப்பட உள்ளது. 

நடைபெறவுள்ள SLAS மதிப்பீட்டுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்கள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேனிலைப்பள்ளிகளிலுள்ள 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு வழங்கப்படவுள்ளது. இம்மாதிரி வினாத்தாள்கள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பதிவிறக்கம் செய்து 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் கீழ்க்கண்ட தேதிகளில் வழங்கப்படும். 

மாதிரி வினாத்தாள்1 13.01.2025 

மாதிரி வினாத்தாள்2 20.01.2025 

மாதிரி வினாத்தாள்3 27.01.2025 

விடைக்குறிப்புகள்1, 2, 3 30.01.2025 

SLAS மதிப்பீட்டுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. 

1. வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https//exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். 

2. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். 

3. அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேனிலைப்பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு 1 இல் உள்ள வழிமுறைகளை தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இணைப்பு: 

1.வழிகாட்டு நெறிமுறைகள் - வினாத்தாள் பதிவிறக்கம் தொடக்கக்கல்வி இயக்குநர் 

Copy to 

பள்ளிக்கல்வி இயக்குநடுக்காக

 1. இயக்குநர், தொடக்கத்தல்வி இயக்ககம் 
2. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் 
3.அனைத்து ( தொடக்கக்கல்வி) கல்வி அலுவலர்





ليست هناك تعليقات:

إرسال تعليق