தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST EXAM) டிசம்பர் - 2024 - தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 25 January 2025

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST EXAM) டிசம்பர் - 2024 - தேர்வு நடைபெறும் தேதி மாற்றம்

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST EXAM) டிசம்பர் - 2024 - தேர்வு நடைபெறும் தேதி மாற்றம்
பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 0102.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. 

தற்போது பாரத சாரணியர் இயக்கத்தின் வைரவிழா 28.01.2025 முதல் 03.02.2025 வரை மணப்பாறை திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளதால் மாணாக்கர்களின் நலன் கருதி, TRUST தேர்வு 08.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்வு தேதி மாற்றம் குறித்தான விவரத்தை விண்ணப்பித்த மாணாக்கர்கள் அறியும் வண்ணம், தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகளை வழங்கிட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். 

மேலும், புதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 03.02.2025 பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவர்தம் மாணாக்கர்களுக்கு வழங்க அறிவுத்துவதோடு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் புதிய பட்டியலை I பதிவிறக்கம் பெயர்ப் அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். 


No comments:

Post a Comment