உலக வானொலி நாள்
திருக்குறள்:
பால்: பொருட்பால் அதிகாரம்: மானம் குறள் எண்:968 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை
பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து?
பொருள்:
உயர் நலங்கெட்டு மானமிழந்த நிலையில், உடலை வளர்த்தல் உயிருக்கு மருந்தாகுமா?
பழமொழி :
Health is happiness. ஆரோக்கியமே ஆனந்தம்.
இரண்டொழுக்க பண்புகள் :
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக
எண்ணமாட்டேன்.
தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக
தேர்வுகளை எழுதுவேன்.
பொன் மொழி:
நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ?அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு. பொது
அறிவு :
1. எந்த நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது? விடை:
இங்கிலாந்து.
2. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ், தகவலை பெறுவதற்கான
கால அளவு_____________ விடை: 30 நாட்கள்
English words & meanings :
Tunnel - சுரங்கப்பாதை Volcano - எரிமலை
வேளாண்மையும் வாழ்வும் :
தற்போதைய, சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்
வகையில் தண்ணீரைப் பயன்படுத்த நீர் மேலாளர்கள் அதிக நிலையான தீர்வுகளைத்
தேடுகின்றனர்.
பிப்ரவரி 13 உலக வானொலி நாள்
உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள்
கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு
அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.[1]
வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே
கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக
தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்
சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச்
2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா [1] (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும்
அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர்
,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின்
இரண்டாவது பெண் தலைவரும்[2] உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும்
ஆவார்.[3] அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதை நரியின் வஞ்சகம்
ஒரு காட்டில் எருது ஒன்று இருத்தது. அந்தக் காட்டின் ஒரு பகுதியில்
பச்சைப்பசேல் என்று புல் மண்டிக் கிடந்தது. தான் இருந்த இடத்தில் கிடைத்த
புல்லே எருதுக்கு போதுமானதாக இருக்கும். எனினும், தூரத்துப் புல்லே கண்ணுக்கு
அழகாக இருந்ததால், புல் மண்டிக் கிடந்த பகுதியை நோக்கி ஒரு நாள் புறப்பட்டது.
அது போகும்போது, மரத்தில் இருந்த பச்சைக் கிளி அதைக் கூப்பிட்டது. “
எருதண்ணா
எங்கேபோகிறீர்கள்?”
என்று கேட்டது பச்சைக்கிளி. "எதிரில் உள்ள புல்வெளிக்குப்
புதுப் புல் தின்னப் போகிறேன்”? என்றது. எருது. “அண்ணா, வேண்டாம்; அங்கே
புலியிருக்கிறது!”” என்று எச்சரித்தது பச்சைக்கிளி. அப்போது, அங்கே நரி ஒன்று
வந்து சேர்ந்தது. அது பச்சைக்கிளியைப் பார்த்து, “ஒருவர் ஒரு வேலையாகப்
போகும்போது எங்கே போகிறீர்கள்? என்று கேட்பதே தவறு; மேலும் எருதண்ணா ஆசையாகப்
புதுப்புல் தின்னப் போவதைத் தடுப்பது சரியில்லை. அங்கே புலியிருக்கிறது என்று
சொல்லி அவரை பயமுறுத்துவது மிகமிகத் தவறு"என்றது. மேலும், நரி, "புல்வெளியிலே
புலியிருப்பதில்லை.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று நீ கேள்விப்பட்டது
இல்லையா?அப்படியே புலியிருந்தாலும் எருதண்ணாவை நீ என்னவென்று நினைத்துக்
கொண்டாய்?” எருதண்ணாவின் கொம்பு அதன் குடலைக் கிழித்து விடாதா?,"என்று கேட்டது.
நரியின் பேச்சைக் கேட்ட எருதுக்குக் கிளியின் மேலே கோபம் கோபமாக வந்தது. தன்
வீரத்தைப் பாராட்டிய நரியோடு புல்வெளியை நோக்கிச் சென்றது. அது பேசிக்கொண்டே
இன்பமாக மேய்ந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்து நரி தழுவியது. புல்வெளியின் ஒரு
புறத்தில் மறைந்திருந்த கிழட்டுப் புலி எருதின் மேல் பாய்ந்தது.
பச்சைக்கிளியின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் நரியின் நயவஞ்சகத்திற்கு ஆளானதை
எண்ணி எருது வருந்தியது. கருத்துரை:-- வஞ்சகமில்லாதவர்கள் கூறும் கடுஞ்சொல்லும்
நன்மையைத்தரும். வஞ்சகரின் இன்சொல்லோ துன்பத்தையே தரும்.
இன்றைய செய்திகள் 13.02.2025
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும்
காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்விடம் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல்
மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனு அளித்தார்.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் கூடுதல் இருக்கை....ரயில்வே நிர்வாகம்
நடவடிக்கை.
பாண்டிச்சேரியில் Heritage Car Rally 2025 – சுதந்திரத்திற்கு
முன்பிருந்த பண்டைய கார்கள் முதல் ‘90களின் இளமை வரை!அணிவகுத்த வின்டேஜ் கார்கள்! -
முதலமைச்சர், ஆளுநர் சிறப்பித்த பாரம்பரிய கார் விழா! ஆச்சர்யத்துடன் மக்கள்கண்டு
ரசித்தனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்
மற்றும் புச் வில்மோர் ஆகியோர் மார்ச் மாத மத்தியிலேயே பூமிக்கு திரும்புவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பை நாசா வெளியிட்டது
இங்கிலாந்துக்கு
எதிரான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை
3-0 என்ற கணக்கில் வென்றது.
Today's Headlines
Tamil Nadu Finance, Environment and Climate Change Minister Thangam Thennarasu
submitted a request to Union Environment, Forest and Climate Change Minister
Bhupender Yadav for financial assistance for Tamil Nadu's projects.
Additional
seats at Chennai Central Suburban Railway Station....Railway Administration
takes action! Heritage Car Rally 2025 in Pondicherry - From ancient cars from
before independence to the youth of the '90s! Vintage cars paraded! - Heritage
car festival celebrated by the Chief Minister and Governor! People watched in
amazement.
Sunitha Williams and Butch Wilmore, who are stranded at the
International Space Station, are expected to return to Earth by mid-March. NASA
made an announcement to this effect
The Indian team won the 3rd and final ODI
against England and won the series 3-0.
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment