புதன் கோள்
திருக்குறள்:
பால்: பொருட்பால் அதிகாரம்: மானம் குறள் எண்:970. இனியவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு. பொருள்: மானக்கேடு வந்த போது உயிரிழக்கும் மாண்புடையவரின்
புகழ் விளக்கை உலகம் தொழுது போற்றும்
பழமொழி :
சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி. Learning is conversant with words and things.
இரண்டொழுக்க பண்புகள் :
என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன்.
என்னிடம் இல்லாத
பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி :
உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாது என்றாலும்,ஒருவருக்கு உணவளி அது போதும்
பொது அறிவு :
1. காற்றில்லாத கிரகம் எது? விடை :புதன்.
2. வட்டமான பாதை கொண்ட கிரகம் எது? விடை:
வெள்ளி
English words & meanings :
Airport. - விமான நிலையம் Bank - வங்கி
வேளாண்மையும் வாழ்வும் :
நீர்நிலைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதால் ஏற்படும் மாற்றத்தை யூட்ரோஃபிகேஷன்
என்கிறோம். பிப்ரவரி 17
நீதிக்கதை குருவியும் பருந்தும்
காட்டிலே ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அவர் தொடையிலே ஒரு சிட்டுக்
குருவி வந்து உட்கார்ந்தது. முனிவர் அதை நோக்கினார். சிட்டுக் குருவியின்
சின்னஞ்சிறிய அழகான உருவம் அவர் உள்ளத்திலே அன்பு பெருகச் செய்தது. ஆதரவாக அவர்
அதன் முதுகைத் தடவிக் கொடுத்தார். அன்பின் மிகுதியால் அதற்குத் கல்வி
முழுவதையும் கற்றுக் கொடுத்தார். சிட்டுக் குருவி சிறந்த கல்வியறிவு பெற்றது,
அது பறவைகளிடம் திரும்பிச் சென்றபோது, எந்தப் பறவையும் கல்வியில் அதற்கு
நிகராக நிற்க முடியவில்லை. எல்லாப் பறவைகளும் அதனிடம் யோசனை கேட்க வந்தன.
சிட்டுக் குருவியின் புகழ் காடெங்கும் பரவியது. புகழ் பெருகப் பெருகச்
சிட்டுக் குருவிக்குச் செருக்கும் பெருகியது, கல்விக் கடலே தான்தான் என்று
நினைத்தது. கல்விக்கடல் என்று எல்லாப் பறவைகளும் தன்னை அழைக்க வேண்டும் என்று
அது விரும்பியது.
கல்விக்கடல் அவர்களே வணக்கம்! என்று சொல்லித்தான் எந்தப்
பறவையும் தன்னை அழைத்துப் பேச வேண்டும் என்று சிட்டுக்குருவி கூறியது. அவ்வாறு
வணங்கிப் பேசாத பறவைகளுடன் அது பேச மறுத்தது. நாளுக்கு நாள் சிட்டுக்
குருவியின் செருக்கு அதிகமாவதைக் கண்ட மற்றப் பறவைகள் அதன் மேல் வெறுப்புக்
கொண்டன. சிட்டுக் குருவியிடம் அவமானம் அடைந்த சில பறவைகள் பருந்திடம் சென்று
முறையிட்டன., சிட்டுக் குருவியின் அளவு கடந்த செருக்கைப் பற்றி பருந்து
கேள்விப்பட்டது. கோபங்கொண்டு பருந்து பறந்து வந்தது.
ஏ ! சிட்டுக் குருவி ”
என்று அழைத்தது. சிட்டுக் குருவி திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. “*கல்விக்
கடலே”? என்று அழைத்து வணக்கம் கூறினால்தான் அது பேசும் என்று கூட இருந்த
பறவைகள் கூறின. ஆனால் பருத்து அவ்வாறு அழைக்கவில்லை. “அற்பக் குருவியே உனக்கு
இவ்வளவு ஆணவமா !*” என்று கேட்டுக்கொண்டே சிட்டுக் குருவியை நெருங்கியது. பிடித்து
வாய்க்குள் போட்டது கருத்துரை :-- செருக்குக் கொண்டவர்கள் வெறுப்புக்கு
ஆளாவார்கள். . செருக்கே அவர்களைக் கொல்லும் பகையாகும்.
இன்றைய செய்திகள் 17.02.2025
தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, விதிகளின்படி தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ திட்ட
நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் இல்லாத 2-வது மெட்ரோ ரயில் விரைவில் சென்னை
வரவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களை
விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் பயணத்தில் பழ ஈக்களை விண்வெளிக்கு
அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. கோடீஸ்வரர் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க
அரசின் செயல்திறன் துறை இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க
வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் நிதியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
ஐஎஸ்எல்
கால்பந்து தொடர்: பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல்
கணக்கில் அபார வெற்றி.
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார்
அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா.
Today's Headlines
Union Education Minister Dharmendra Pradhan has said that the SSA project
funds cannot be allocated to Tamil Nadu as per the rules until the national
education policy is accepted.
Metro Rail Company officials said that the 2nd
Metro driverless train will arrive soon.
ISRO plans to send fruit flies into
space in the first trip of the Gayanan project that will send humans to the sky.
* The US state's performance sector, led by billionaire Elon Musk, has announced
the cancellation of $ 21 million funded in India to increase the percentage of
voters in India.
ISL Football Series: Chennai's FC team beat Punjab 2-1
Qatar Open Tennis Tournament: Amanda Anisimova won the championship title
Covai
women ICT_போதிமரம்
No comments:
Post a Comment