பொருள் :
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை-6 - தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு" ஜனவரி 2025 தற்காலிக
விடைகுறியீடுகள் (Tentative Key Answers) வெளியிடுதல் -தொடர்பாக.
25.01.2025
(சனிக்கிழமை) அன்று நடைபெற்ற "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு"
தொடர்பான தற்காலிக விடைக்குறியீடுகள் (Tentative Key Answers ) 06.02.2025 அன்று
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில்
வெளியிடப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள். இவ்விடைக்குறியீடுகள் சார்பாக
மாற்றம் இருப்பின், உரிய ஆதாரத்துடன் 14.02.2025-க்குள் dgedsection@gmail.com என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை தங்கள் எல்லைக்குட்பட்ட
அனைத்து அரசு மேல்நிலை/உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment