சைனிக் பள்ளிகளில் சேர்க்கை: ஏப்ரல் 5இல் நுழைவுத்தேர்வு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 5 February 2025

சைனிக் பள்ளிகளில் சேர்க்கை: ஏப்ரல் 5இல் நுழைவுத்தேர்வு

சைனிக் பள்ளிகளில் சேர்க்கை: ஏப்ரல் 5இல் நுழைவுத்தேர்வு 
நாடு முழுவதும் உள்ள சைனிக்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலை யில், அவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஏப்.5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளி களில் 6, 9-ஆம் வகுப்பு மாணவர் சேர்க் கைக்கான தேசிய நுழைவுத் தேர்வு என்டிஏ (தேசிய தேர்வுகள் முகமை) சார்பில் ஆண் டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, வரும் கல்வியாண்டில் (2025-2026) சைனிக் பள்ளி சேர்க்கைக்கான அறிவிக் கையை என்டிஏ கடந்த டிசம்பரில் வெளி யிட்டது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு டிச.24-இல் தொடங்கி ஜன. 23 வரை நடைபெற்றது. 

இந்தத் தேர்வை எழுதுவ தற்கு நாடு முழுவதும் 1.5 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் சைனிக் நுழைவுத் தேர் வுக்கான தேதியை என்டி.ஏ தற்போது அறி வித்துள்ளது. அதன்படி தேர்வு ஏப்.5-ஆம் தேதி (சனிக் கிழமை) நடத்தப்படவுள்ளது. இதற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை https://exams.nta.ac.in/AISSEE www.nt a.ac.in ஆகிய வலைதளங்களில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி மூல மாக அல்லது aissee@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment