மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 01.03.2023 அன்று 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுஉடல் பரிசோதனை செய்வது தொடர்பான இத்திட்டச் சார்ந்த செய்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
இத்திட்டம் தொடர்பாக பார்வை (1)இல் காணும் அரசாணையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாணையில், முதற்கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட அனைத்துவகை ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித்துறையில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு (Package-1 Gold Scheme) திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பரிசோதனைகளை மேற்கொள்ள பார்வையில் காணும் அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1. Complete Haemogram
2. ESR Urine Analysis
3. Blood Sugar F & PP
4. Urea, Creatinine, Uric Acid
5. Lipid Profiles
6. Total Cholesterol (HDL&LDL)
7. Triglycerides, Total Cholesterol HDL ratio.
8. Liver Function Test
9. Serum Bilirubin(Total & direct)
10. AST, ALT, SAP, Total Protein And Albumin
11. Hbs/Ag
12. Blood Grouping &Typing
13. ECG
14. X-Ray Chest
15. USG Abdomen.
16. Pap Smear
எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 50 வயதினை கடந்தவர்களில் வயது மூப்பு அடிப்படையில் தற்போது 150 ஆசிரியர்களை இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தெரிவு செய்யப்பட வேண்டும். 50 வயதினை கடந்த ஆசிரியர்களிடமிருந்து இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தின் படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சார்ந்த பள்ளியின் தலைமையாசிரிர்கள் உரிய பரிந்துரையுடன் 28.02.2025 க்குள் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு சமர்பிக்க வேண்டும்.
பெறப்பட்ட விண்ணப்பங்களை 07.03.2025 க்குள் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிசிலினை செய்து, 150 ஆசிரியர்களை தெரிவு செய்தல் வேண்டும். மேலும், தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை மாவட்ட மருத்துவம் மற்றும் அளவிலான மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலருக்கு சமர்பித்து உடல் நல பரிசோதனைக்கான கால அட்டவணையினை தயாரித்து அதன் தகவல்களை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் தெரிவித்து ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பில் உள்ள அட்டவணையின் مان மாவட்ட வாரியாக 150 ஆசிரியர்களை தெரிவு செய்து (Package-1 Gold Scheme) திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இத்திட்டத்திற்கென இணைப்பில் உள்ள விவரப்படி, தலா ரூ.1,50,000/- ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஓதுக்கீடு செய்து 38 மாவட்டத்திற்கும் ரூ.57,00,000/- தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.
இணைப்பு:
1. விண்ணப்பப் படிவம் -1
2. அரசாணை
3. இணைப்பு -1
No comments:
Post a Comment