"தேசிய தோட்டக் கலை வாரியம்" ரூ.50,000/ மாத ஊதியத்தில் ஆலோசகர்களாக செயல்பட விண்ணப்பிக்காம் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 12 February 2025

"தேசிய தோட்டக் கலை வாரியம்" ரூ.50,000/ மாத ஊதியத்தில் ஆலோசகர்களாக செயல்பட விண்ணப்பிக்காம்

தேசிய தோட்டக் கலை வாரியம் 

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் "பழம்/காய்கறி/பூ நாற்றாங்கால்களின் அங்கீகாரம் மற்றும் மதிப்பீடு" என்ற தலைப்பின் கீழ் - தோட்டக்கலையை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் இட மாற்றம்" என்ற திட்டத்தின் கீழ் ஆலோசகர்களை ஈடுபடுத்துதல். 

வேளாண்மை/தோட்டக்கலை பல்கலைக் கழகங்கள், ஐசிஏஆர், எஸ்ஏயு,என்ஆர்சியு, மற்றும் தோட்டக்கலைத் துறைகளில் அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகள்/விஞ்ஞானிகளிடம் இருந்து "தொழில் நுட்ப மேம் பாடு மற்றும் இடமாற்றம்” என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும், 'பழம்/காய்கறி/பூ நாற்றங்கால்களின் அங்கீகாரம் மற்றும் மதிப்பீடு' என்ற தலைப்பில் ஆலோசகர்களாக ஈடுபடுத்த என்எச்பி விண்ணப்பங்களை வரவேற்கிறது. 

இந்த வாரியம், நாள் ஒன்றுக்கு ரூ.3000/- என்ற ஊதியப்படி ஒட்டுமொத்த உச்சவரம்பாக மாதத்துக்கு ரூ.50,000/-க்குள் ஊதியம் வழங்கும். ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் இந்த விளம்பரம் வெளியான 30 நாட்களுக்குள் மேலே குறிப்பிட்ட முகவரியில் இயங்கும் அலுவலகத்தின் மேலாண் இயக் குநருக்கு தங்கள் சுயவிவரம் கொண்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். 


இது தொடர்பான விவரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்எச்பி இணைய தளமான www.nhb.gov.in ல் பெறலாம். 

No comments:

Post a Comment