மத்திய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழு 2024 2025 ஆம் ஆண்டிற்கு
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக, UDISE 2022-2023 ன்படி
பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை
வழங்கியுள்ளது.
எனவே அனுமதிக்கப்பட்டுள்ள 50% இரண்டாம் கட்ட தொகையினை அனைத்து அரசு
பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையினை அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) வங்கி கணக்கிற்கு 03
நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். வழங்கப்படும் தொகையினை கீழ்காணும் இனங்களுக்கு பயன்படுத்துதல்
வேண்டும். பள்ளி மானிய தொகையில் முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்யப்பட
வேண்டியவைகள் பின்வருமாறு: ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள Tablet-க்கு தேவையான SIM
-ற்கான ஜீலை முதல் மார்ச் மாதத்திற்கான தொகையினை மட்டும் (Rs.110/- per Tacher)
பள்ளி மானயத்திலிருந்து மேற்கொள்ளுதல் வேண்டும். மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கை
கழுவும் வசதி (Hand washing facility) மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கிடல்
வேண்டும். பள்ளி வளாகத்தில் சோப்பு மற்றும் கிருமி நாசினி (Hand Sanitizer)
துப்புரவு செய்ய பயன்படும் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் தேவையான அளவில்
இருப்பில் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி
தெளித்து சுத்திகரிப்பு பணி தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும் SAP - (Swachhta Action
Plan) பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10% முழு சுகாதார செயல்திட்ட
(Swachhta Action Plan) இனங்களான பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத் தூய்மை, சுகாதாரமாக
பராமரித்தல், கை கழுவும் வசதி (Hand washing facility) ஏற்படுத்துதல், தூய்மையான
குடிநீர், மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் நடத்தை மாற்றம் மற்றும் திறன்
மேம்பாட்டிற்கு இந்நிதியினை குறிப்பாக கழிப்பறையைச் சுத்தம் செய்வதற்கு
முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்துதல் வேண்டும்மாணவர்கள் முறையாக கழிப்பறைகளை
பயன் படுத்துவதை உறுதி செய்தல் வேண்டும். கழிவறைகளை சுத்தம் செய்ய தேவையான
பொருட்களை வாங்குதல் வேண்டும். தினமும் கழிவறைகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம்
செய்வதை உறுதி செய்தல் வேண்டும். குறைந்த எண்ணிக்கையிலான கழிவறைகள் இருந்தால்,
பாதுகாப்பை அனுமதிக்கும் வகையில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பயன்பாட்டை உறுதி
செய்யும் வகையில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வேண்டும்.
கழிவறைகளில் கழிவு
நீர்த்தொட்டி பழுது பார்த்தல் மற்றும் சுத்தம் செய்தல், தண்ணீர் வசதிக்கான
குழாய்கள் பழுது பார்த்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறன் கொண்ட
மாணவர்கள் பயிலும் பள்ளியில் இருக்கும் அனைத்து கழிவறைகளில் குறைந்தபட்சம் ஒரு
கழிவறையை மாற்றுத் திறனாளிகள் பன்படுத்தும் விதமாக கைப்பிடிகள் தரை ஒடுகள்,
கழிப்பறை கோப்பைகள் மற்றும் விவரப் பலகைகள் அல்லது குடிறியீடுகள் அமைக்க பயன்படுத்த
வேண்டும். ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோர்கள் அடங்கிய குழுவானது கழிவறைகள் சுத்தமாக
இருப்பதையும், தண்ணீர் வசதி தொடர்ந்து கிடைப்பதையும் கண்காணிக்க வேண்டும்.
கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு வாங்கப்பட்ட பொருட்களை தினமும் பயன்படுத்துவதையும்
உறுதி செய்தல் வேண்டும்.
இதற்காக ஒரு ஆசிரியர் தலைமையிலான குழுவினை அமைத்து
பார்வையிட்டு பதிவேட்டில் தினமும் பதிவு செய்ய வேண்டும். குறைகள் இருப்பின்
அதனையும் சுட்டிக் காட்டுதல் வேண்டும். இதனை ஒவ்வொரு நாளும் பள்ளி தலைமையாசிரியர்
பார்வையிட்டு கையொப்பமிட வேண்டும். மாணவர்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதரம் (Health
and Hygiene) குறித்து மாதம் ஒருமுறை விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் வேண்டும்.
பள்ளி தலைமையாசிரியர் வாரம் ஒருமுறை காலை வழிபாட்டில் இதன் முக்கியத்துவம் குறித்து
மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள உபகரணங்களை
மாற்றவும், பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான மின்கட்டணம். இணையம், ஆய்வக
உபகரணம், குடிநீர், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் போன்றவற்றிற்கு
இந்நிதியினை பயன்படுத்துதல் வேண்டும். அரசு பள்ளிக் கட்டடங்களின் கட்டமைப்பு
வசதிகளான சுற்றுச்சுவர். வகுப்பறை. கழிவறை, குடிநீர் ஆகியவற்றை சமுதாய
பங்களிப்புடன் பராமரிக்கவும். பழுதுபார்க்கவும் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தினை
ஊக்குவித்திட இந்நிதியினை பயன்படுத்துதல் வேண்டும்.
Toner-நிரப்புவதற்கான
செலவினத்தை மேற்கொள்ளலாம். மேலும், இந்நிதியினை பயன்படுத்தும் போது பார்வை 2ல்
காணும் Financial Management Manual 7.14 (IAII) level of procurement7.5000- Lg
Ba, விலை, பயன்பாடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கீழ்க்காணும் கொள்முதல் விதிகளை
பின்பற்றி SMC அளவிலேயே ஒதுக்கப்பட்ட நிதிக்கு மிகாமல் கொள்முதல் செய்தல் வேண்டும்.
கொள்முதல் விதிகள் மேற்கொண்ட பின்னர் பொருட்களின் தரம் மற்றும் General Financial
Rules (GFR) 145, 146 ມຊ ຂພ சான்றிதழில் தலைமைஆசிரியர் கொள்முதல் குழுவினர்
கையொப்பமிட்டு Procurement file ல் இணைத்தல் வேண்டும்.
அரசு உயர்நிலை/மேல்நிலைப்
பள்ளிகளில் ICT Digital Initiatvies (High tech lab) தலைப்பின் கீழ் இணையத்திற்காக
வழங்கப்படும் தொகை பள்ளியின் இணையப் பயன்பாட்டிற்குப் போதுமானதாக இருக்கும்
பட்சத்தில் மீண்டும் பள்ளி மானியத்திலிருந்தும் அச்செலவினம் மேற்கொள்வது
தவிர்க்கப்படுதல் வேண்டும். கிராமப் பஞ்சாயத்திற்குட்பட்ட பள்ளிகளில் பள்ளித்
துாய்மைப் பணியாளர் ஊதியம் மற்றும் தூய்மைப் பொருட்களுக்கான தொகை பஞ்சாயத்து
அலுவலகத்திலிருந்து பெறப்பட்டிருப்பின் அதுசார்ந்த செலவினம் பள்ளி
மானியத்திலிருந்தும் மேற்கொள்ளப்படக்கூடாது மின்கட்டணத்திற்கான தொகை வேறு துறை
மூலமாகவோ அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் பிற உட்கூறு மூலமாகவோ பெறப்படின்
அச்செலவினத்தை பள்ளி மானியத்திலிருந்து மேற்கொள்ளக்கூடாது.
பள்ளி மேலாண்மைக்குழு
வழியாக (SMC) செலவிடுவதற்கான நெறிமுறைகள் ஒருங்கிணைந்த பள்ளி மானியப் பதிவேடு
பள்ளித் தகவல் பலகையில் ஒருங்கிணைந்த பள்ளி மானிய தொகை பெறப்பட்ட விவரம்
ஆகியவற்றைத் தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும். பள்ளி மேலாண்மை
குழுவினர்களுடனும், ஆசிரியர்களுடனும், கலந்து ஆலோசித்து இக்கல்வியாண்டில் எந்தெந்த
பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தேவைப்பட்டியல் தயாரித்தல் வேண்டும். அதற்கான
உத்தேச செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு, அதனை தீர்மானமாக பள்ளி மேலாண்மைக் வளர்ச்சிக்
குழு தீர்மானப் பதிவேட்டில் முறையாக பதிவு செய்தல் வேண்டும். மேற்கூறிய இனங்களில்
பொருட்களை வாங்குவதற்கு தேவைப்படும் தொகையினை எடுத்து பள்ளி மேலாண்மைக் குழு
தீர்மானத்தின்படி அத்தியாவசியமான மற்றும் தரமான பொருட்களை Single Nodal Agency
(SNA) மூலம் கொள்முதல் விதிகளை பின்பற்றி வாங்கப்படுதல் வேண்டும்.
கோவிட் 19
சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான கிருமி நாசினியை நுகர்பொருள் (Consumable) பட்டியலில்
சேர்த்துக் கொள்ளலாம். 15.03.2025-க்குள் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல்
செய்யப்பட்டிருத்தல் வேண்டும். 15.032025-க்குள் கட்டட பழுதுப்பார்க்கும் பணிகள்
நிறைவு செய்யப்பட வேண்டும். பள்ளிமானியத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் செலவின
விவரத்தை EMIS ல் அவ்வப்போது பதிவு செய்தல் வேண்டும். வேறு துறைகள் மூலமாகவோ அல்லது
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உட்கூறுகளின் கீழோ நிதி ஒதுக்கப்பட்டிருப்பின்
அச்செயல்பாடுகளுக்கு புள்ளி மானியத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்படக்கூடாது.
ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கர் பள்ளி பார்வையின் போது அப்பள்ளிக்கு
வழங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு
கணக்குகளை ரொக்கப் பதிவேட்டில் பதிவு செய்வதற்கு ஏதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்கள்
வங்கி கணக்கு புத்தகம், ரொக்க பதிவேடு மற்றும் செலவு மேற்கொண்டதற்கான பற்று
சீட்டுகளை பள்ளி மேலாண்மைக்குழு கணக்கரிடம் ஒத்திசைவு செய்தல் வேண்டும். நிதி ஆண்டு
இறுதியில் ரொக்கக் கணக்குப் புத்தகம் இறுதி இருப்பு ஆகியவை கணக்காளரால்
சரிபார்க்கப்பட்டு தலைமையாசிரியர் கையொப்பமிடுதல் வேண்டும். பள்ளி மானியத் தொகை
(School Grant) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பயன்பாட்டுச் சான்றிதழ்
(Utilization Certificate) மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 15.04.2025-க்குள் அனுப்பி
வைத்தல் வேண்டும். (Purchase of Materials) 1 அடிப்படை வசதிகளை மேம்படுத்தத்
தேவையான பொருட்களை பட்டியலிட வேண்டும்.
அவ்வாறு பட்டியலிட்ட பொருட்களை அவசியமான
பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின்படி தரமான
பொருட்கள் மட்டுமே வாங்கப்பட வேண்டும். 2 தேவைப்படும் பொழுது மட்டும் பொருள்கள்
வாங்க தேவையான அளவிற்கு வங்கியிலிருந்து தொகை எடுக்கப்பட வேண்டும். கூடுதலாக தொகை
எடுக்கப்பட்டு நெடுநாட்களுக்கு தலைமையாசிரியர் கையிருப்பில் வைத்திருத்தல் கூடாது
3. பொருள்கள் வாங்கியமைக்கான பற்றுச்சீட்டுகள் (Vouchers) பெறப்பட்டு வரிசையாக,
தேதிவாரியாக பத்திரமாக பராமரிக்கப்பட வேண்டும். ஒரு செலவினம் ரூ.500/-க்குமேல்
இருந்தால், அத்தகைய பற்றுச்சீட்டுகளுக்கு GST எண் அவசியமானதாகும். தொகை பெறப்பட்டமை
மற்றும் செலவு செய்யப்பட்டமை ரொக்கப் பதிவேட்டில் (Cash book) விவரங்களை பதிவு
செய்வதுடன், ஒவ்வொரு மாதக் கடைசியிலும் ரொக்கப்பதிவேடு Abstract-இல் தலைமை ஆசிரியர்
கையொப்பமிட வேண்டும்.
வாங்கப்பட்ட பொருள்களின் விவரங்களை இருப்புப் பதிவேட்டில்
(Stock Register) பதிவு செய்தல் வேண்டும். இருப்புப் பதிவேட்டு பக்க எண் பற்று
சீட்டில் பதியப்பட வேண்டும். ஒவ்வொரு பதிவிலும் தலைமை ஆசிரியர் கையொப்பமிட
வேண்டும். மாவட்ட அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மாநில திட்ட
இயக்ககத்திலிருந்து நிதி ஒதுக்கீடு பெற்றவுடன் மாவட்ட அளவில் UDISE 2022-23 ல் உள்ள
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுமதிப்பட்டுள்ள பள்ளிகளின் SMCக்கு SNA மூலம் நிதி
ஒதுக்கீடு செய்தல் வேண்டும். மேற்காண் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி பயன்பாடு
சார்ந்த விவரங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு EMIS Portal வழியாக
தெரிவிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும். பள்ளி மானியத்தை பயன்படுத்தி,
பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதை உறுதி செய்ய
வேண்டும். 28.02.2025-க்குள் சிறு பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டதை
உறுதி செய்தல் வேண்டும். களஆய்வு அலுவலர்கள் பள்ளிப் பார்வைக்குச் செல்லும் போது
பள்ளி மானியம் முறையாக செலவிடபட்டுள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
மேலும்,
பள்ளிப்பார்வையின் போது மேற்கூறிய வேறு துறைகள் மூலமாகவோ அல்லது ஒருங்கிணைந்த
பள்ளிக் கல்வியின் பிற உட்கூறுகளின் கீழே நிதி ஒதுக்கப்பட்டிருப்பின்
அச்செயல்பாடுகளுக்கு பள்ளி மானியத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டு ரசீதுகள்
சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றனவா முறைப்படுத்துதல் வேண்டும். என்பதைக் கண்காணித்து
மாவட்டத் திட்ட அலுவலர்கள் EMIS Portal-ன் பதிவுகளை கண்காணித்தல் வேண்டும். தலைமை
ஆசிரியர், ஆசிரியப் பயிற்றுநர், பள்ளி மேலாண்மைக் குழு கணக்கர் ஆகியோரின் பார்வைக்
குறிப்பு மற்றும் Monitoring App-ன் பதிவுகளை தொகுத்து மாதாந்திர மீள் ஆய்வு
கூட்டத்தின் போது ஆய்வு செய்தல் வேண்டும். பயன்பாட்டுச் சான்றிதழ் களஆய்வு
அலுவலர்கள் பள்ளிமானியத் தொகை (School Grant) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி
செய்த பின் பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் (Utilization Certificate)
பெற்று, மாவட்ட அளவில் தொகுத்து மாவட்டத்திறகான பயன்பாட்டுச் சான்றிதழை மாநிலத்
திட்ட இயக்ககத்திற்கு 15.04.2025-க்குள் அனுப்பி வைத்தல் வேண்டும்.
கீழ்க்கண்ட
அட்டவணையில் உள்ளபடி மாவட்டங்களுக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேற்காண் வழிகாட்டு
நெறிமுறைகள் மற்றும் நிதி பயன்பாடு சார்ந்த விவரங்கள் பள்ளித் தலைமை
ஆசிரியர்களுக்கு EMIS Portal வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும், மேலும்
ஒருங்கிணைந்த பள்ளி மானியத் தொகையினை இச்சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள
செயல்பாடுகளை தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தாமல் உரிய காலத்திற்குள்
பயன்படுத்த அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment