652 தற்காலிகப் பணியிடங்களுக்கு 17.08.2025 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 22 February 2025

652 தற்காலிகப் பணியிடங்களுக்கு 17.08.2025 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு

652 தற்காலிகப் பணியிடங்களுக்கு 17.08.2025 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு 
பார்வை ஒன்றில் காணும் அரசாணையில், 39 அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளுக்கு 14 தலைமையாசிரியர் பணியிடங்கள், 376 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 236 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 26 உடற்கல்வி இயக்குநர் நிலை-1, ஆக மொத்தம் 652 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 2 2. பார்வை இரண்டில் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறையின்படி 18.11.2024 முதல் 17.02.2025 வரை மூன்று மாதத்திற்கு தற்காலிக தொடர்நீட்டிப்பு (Express Pay Order) வழங்கப்பட்டுள்ளது. 

3. இந்நிலையில் மேற்காணும் தற்காலிகப் பணியிடங்களுக்கு 18.02.2025 முதல் 17.08.2025 வரை ஆறு மாத காலங்களுக்கு ஊதியம் பெறத்தக்க வகையில் சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணையினை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
4. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று இக்கடிதத்தின் இணைப்பில் கண்டுள்ள 14 தலைமையாசிரியர் பணியிடங்கள், 376 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 236 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 26 உடற்கல்வி இயக்குநர் நிலை 1 தற்காலிகப் பணியிடங்களுக்கு 18.02.2025 முதல் 17.08.2025 வரை ஆறு மாத காலங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான 18.02.2025 முதல் 17.08.2025 முடிய 6 மாத காலத்திற்கு சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 5. இக்கடிதம் நிதித்துறையின் அரசாணை (நிலை) எண்.334, நிதி(BG-1) துறை, நாள் 22.10.2022-ன்படி வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment