ஏ.ஐ.தொடர்பான வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, சென்னை
ஐ.ஐ.டி.யில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு
வருகின்றன.
அந்த வகையில், நடப்பாண்டு, ‘வெப் எம்.டெக்'எனும் புதிய படிப்பை சென்னை
ஐ.ஐ.டி. அறிமுகம் செய்துள்ளது. கணினி அறிவியல் மற்றும் என்ஜினீயரிங், மெக்கானிக்கல்
என்ஜினீயரிங், விண்வெளி என்ஜினீயரிங் ஆகிய துறைகளில் பணிகளில் ஈடுபடுவோர், செயற்கை
நுண்ணறிவு தொடர்பாக தங்களின் திறன்களை அதிகரித்துக்கொள்ளும் வகையில் இந்த புதிய
படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் வகுப்பு ஆகஸ்டு அல்லது
செப்டம்பர் மாதத்தில் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த
படிப்பில் சேர விரும்புவோர், https://code.iitm.ac.in/webmtech என்ற இணையதளத்தில்
வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment