கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 5 February 2025

கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். சென்னை . 06 
பள்ளிக் கல்வி 2024-2025 ஆம் கல்வி ஆண்டு கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து. 
1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், ந.க.எண்34785/ எம்/இ1/2022. நாள் 19.05.2023, 06.12.2023 
2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண். 34785/ எம்/இ1/2023, நாள் 04.01.2024. 
3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண். 34785/ எம்/இ1/2023. நாள் 08.01.2024. 
2024-25-ஆம் ஆண்டில், பார்வையில் காணும் செயல்முறைகளின் படி நவம்பர். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சிறார் திரைப்படங்கள் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திரையிடப்பட்டுள்ன. அதனை தொடர்ந்து சிறார் திரைப்படம் திரையிடல் சார்ந்த பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பொருட்டு. அரசுப் பள்ளிகளில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் பங்கு பெறும் வகையில் எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல். பள்ளி அளவிலான போட்டிகளை அட்டவணை-1 ல் குறிப்பிட்டுள்ளவாறு திட்டமிட்டு நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
மேலும் வட்டாரம் மற்றும் மாவட்ட போட்டிகள் நடத்திடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும். வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் போது, இதில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த நடுவர்களை தேர்ந்தெடுத்து உரிய முறையில் போட்டிகளை நடத்துதல் வேண்டும். அளவிலான மேலும், பள்ளி. வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு திட்டமிட்டு நடத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிலையிலான போட்டிகளை நடத்தும் போதும், போட்டிகள் குறித்த விவரத்தினை போட்டி நடக்கும் தேதிக்கு முந்தைய தினத்தன்று மட்டுமே மாணவர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்னதாக தெரிவித்தல் கூடாது.

No comments:

Post a Comment