பொறியியல் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள்,
பேராசிரியர்களுக்கு லினக்ஸ் இண்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்க அண்ணா பல்கலை. ஏற்பாடு
செய்துள்ளது. லினக்ஸ் என்பது கணினிகள் மற்றும் சர்வர்களில் பயன்படுத்தப்படும் ஒரு
திறந்த இயக்க முறை ஆகும். லினக்ஸ் பயிற்சி மூலம் லினக்ஸ் கட்டளைகளை பயன்
படுத்துதல், கோப்புகளை நிர்வகித்தல், கணினி நிர் வாகம் போன்றவற்றை
தெரிந்துகொள்ளலாம்.
இந்நிலை யில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பில் இளநிலை,
முதுநிலை படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின்
தொழில்நுட் பத்திறனை மேம்படுத்தும் வகையில் லினக்ஸ் அடிப் படைகள் தொடர்பாக
இண்டர்ன்ஷிப் பயிற்சிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்துறை ஆராய்ச்சி மையம் சிறப்பு
ஏற்பாடு செய்துள்ளது. மொத்தம் 5 நாட்களை உள்ளடக்கிய இந்த பயிற்சி யில், தொழில்
நிறுவனங்களில் இருந்து நிபுணர்கள் வந்து செய்முறைப் பயிற்சி அளிப்பார்கள். கிண்டி
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிப்.25 முதல் 28-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் 1
மணி வரையும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறும். இந்த பயிற்சியில்
சேர விரும்புபவர்கள் www.annauniv.edu/cmdsr என்ற இணையதளத்தில் பிப்.24-க்குள்
பதிவுசெய்ய வேண்டும் என்று பயிற்சி ஒருங்கிணைப் பாளரான பேராசிரியை ஜெ.மஞ்சுளா
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment