கூட்டத்தில், வரும் டிசம்பரில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில
மாநாட்டை நடத்துவது, அதில் தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை
கலந்துகொள்ள அழைப்பது. தமிழகத்தில், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய
ஓய்வூதிய திட்டத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள, 3 நபர் குழுவை ரத்து
செய்து, தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
2023ல், தமிழக அரசுக்கும், டிட்டோ ஜாக் கூட்டமைப்பிற்கு இடையே நடந்த
பேச்சுவார்த்தையில், அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட, 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற
அரசு உத்தரவு வழங்க வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் என்ற திட்டத்தை அமல்படுத்தி,
2009ம் ஆண்டிற்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை
களைய வேண்டும்.
கடந்த அ.தி.மு.க., அரசால் ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகளை
மீண்டும் அளிக்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் மீண்டும் ஒன்றிய அளவிலான
முன்னுரிமையை அமல்படுத்தி, இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி
உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment