க்யூட் தேர்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 3 February 2025

க்யூட் தேர்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

க்யூட் தேர்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு 

மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரி களில் முதுநிலை பட்டப் படிப்பு இடங்களுக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கு (க்யூட்) விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நீட்டிக் கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக ளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். 

இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டி.ஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி அடுத்த கல்வியாண் டில் 2025-26 முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு கணினி வழி யில் வரும் மார்ச் 13 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 2-இல் தொடங்கி பிப். 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண் ணப்பிக்கும் அவகாசம் பிப். 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 இதை யடுத்து விருப்பமுள்ளவர்கள் /exams.nta.ac.in/CUET-PG2 என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப் பக் கட்டணத்தை பிப். 9-ஆம் தேதி வரை செலுத்தலாம். மேலும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு, விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைதளத் தில் அறிந்து கொள்ளலாம்.

 இதுதவிர விண்ணப்பிப்பதில் ஏதும் சிர மங்கள் இருப்பின் 01140759000 என்ற தொலைபேசி எண் அல்லது helpdesk-cuetpg@nta.ac.in கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment