செம்மொழி நாள் விழாவையொட்டி, தமிழக
அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரிகளில்
பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டுள் ளது. இது
குறித்து வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த
நாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள் விழாவா கக் கொண்டாடப்படும் என தமி ழக சட்டப்
பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 1, பிளஸ் 2
வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச் சுப்
போட்டி நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான போட்டி கள் மே 9-ஆம்
தேதியும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டி கள் மே 10-ஆம் தேதியும் நடை பெறும்.
இப்போட்டிகளில் பங் கேற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பப்படிவங்களை தமிழ்
வளர்ச்சித் துறையின் https://t amilvalarchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில்
பதிவி றக்கம் செய்து அல்லது அவர்கள் பயிலும் பள்ளியின் மாவட்டங்க ளில் அமைந்துள்ள
தமிழ் வளர்ச் சித் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் அலுவலகங்களில் நேரடியாக
பெற்று தலைமையாசி ரியர், துறைத் தலைவர் பரிந்துரை யுடன் மார்ச் 25-ஆம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தமிழ்வளர்ச்சி துணை
இயக்குநர், உதவி இயக்குநர் அலு வலகங்களில் நேரில் அளிக்க வேண்டும்.
போட்டி நடைபெ
றும் இடம், நாள் குறித்த தகவல் கள் மாவட்ட துணை இயக்குநர் கள், உதவி இயக்குநர்கள்
வழியாக முதன்மைக் கல்வி அலுவலகம், பள்ளித் தலைமையாசியர் வழி யாகவும் நாளிதழ்
வாயிலாகவும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்ப டும். போட்டிக்கான தலைப்புகள் போட்டியின்
போது அறிவிக் கப்படும். செம்மொழியின் சிறப்பு மற் றும் முத்தமிழறிஞர் கலைஞரின்
தமிழ்த்தொண்டின் பெருமை சார்ந்த தலைப்பு அளிக்கப்ப டும். இப்பொருண்மை சார்ந்த
தலைப்புகளுக்கு மாணவர் கள் ஆயத்தப்படுத்திக் கொள்ளலாம்.
மாவட்ட அளவில் கட்டுரை
மற்றும் பேச்சுப்போட் டியில் முதல் பரிசு ரூ.10 ஆயி ரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயி
ரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மாநில அளவில் கட்டுரை மற்றும்
பேச்சுப்போட் டியில் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம்
மற்றும் மூன்றாம் பரிசு ரூ.7 ஆயி ரம் வழங்கப்படும். மாவட்டப் போட்டிகளில் முதல்
பரிசு பெறும் பள்ளி, கல் லூரி மாணவர்கள் மே 17-ஆம் தேதி சென்னையில் நடைபெ றவுள்ள
மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவர். மாநிலப் போட்டியில் சுலந்து
கொண்டு முதல் மூன்று பரிசுக ளைப் பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஜூன்
3-ஆம் தேதி நடைபெறவுள்ள செம் மொழிநாள் விழாவில் பரிசு மற் றும் பாராட்டுச்
சான்றிதழ் வழங் சுப்படும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment