பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - "பேராசிரியர்
அன்பழகன் விருது" - சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல்
தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் -சார்ந்து- பள்ளிக் கல்வி
இயக்குநர் செயல்முறைகள்..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 30.11.2022
நாளிட்ட அறிவிப்பின்படி "கற்றல்-கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு,
தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த
பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும்" 61 601
அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வை(3)ல் காணும் அரசாணையில் சிறந்த பள்ளிக்கான
பேராசிரியர் அன்பழகன் விருதிற்கு தகுதியான பள்ளியினை தெரிவு செய்து விருது
வழங்குதல் சார்ந்து பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பொதுத் தேர்வுகள் / திறனறித் தேர்வுகளில் பள்ளி
மாணவர்களின் பங்களிப்பு. அன்றாட கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகள், வகுப்பறை
கற்பித்தலில் தொழில்நுட்ப பயன்பாடு, கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா
செயல்பாடுகள் மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்டு வரும்
நடவடிக்கைகள் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை. விளையாட்டுப் போட்டிகள்,
கலைத்திருவிழா, மன்ற செயல்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு ஆகியனவற்றின்
அடிப்படையிலும், பள்ளி வகுப்பறைகள் மாணவர்களின் கற்றலுக்கு ஏற்ற வகையில் இருக்கை
வசதி மற்றும் தேவையான மின் மற்றும் மின்னணு சாதனங்களுடன் கூடிய ஆய்வகங்கள்,
வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானம் மற்றும் அவற்றின்
பயன்பாடு போதுமான எண்ணிக்கையிலான கழிப்பறைகள் மற்றும் அவற்றின் முறையான பராமரிப்பு,
பள்ளிவளாக தூய்மை. மாணவர்கள் உணவருந்த சுத்தமான குடிநீர் வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளமை, பள்ளியின் பசுமைச் சூழல், பள்ளி காய்கறித் தோட்டம் மற்றும்
அதன் பயன்பாடு நூலக பயன்பாடு ஆய்வக பயன்பாடு ஆகியவற்றையும் மதிப்பிட்டு
விருதுக்குரிய பள்ளியை தெரிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கான
குழு அமைத்தல் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருதுக்கான பரிந்துரைகளை
வழங்கிட ஏதுவாக மாவட்ட / மாநில அளவில் பின்வரும் தேர்வு குழுவினை கீழ்கண்டவாறு
அமைத்திட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment