ரயில்வேயில் 32438 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 21 February 2025

ரயில்வேயில் 32438 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்

ரயில்வேயில் தேர்வர்கள் எதிர்பார்த்த ஆர் ஆர் பி குரூப் டி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 32,438 காலிப்பணியிடங்களை நிரப்ப,அறிவிப்புவெளியாகியுள்ளது. 

இந்தபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை அமைப்பாக ரயில்வே உள்ளது. லட்சக்கணக்கான ஊழியர்கள் இந்தியன் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்கள். கை நிறையசம்பளம் சலுகைகள் இருப்பதால் ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான ஊழியர்களின் கனவாக உள்ளது. 

ரயில்வே வேலைக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் ரயில்வே வேலையை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என பல லட்சக்கணக்கான இரவும் பகலுமாக படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தேர்வர்கள் பெரிதும் எதிபார்த்து இருந்த ரயில்வேகுரூப்டி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை மறுநாளுடன் முடிய இருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குரூப் டி தேர்வு அறிவிப்பு பற்றிய விவரங்களை பார்க்கலாம். 

பணியிடங்கள் விவரம்: 

டிராபிக் பாயிண்ட்ஸ்மேன் பி5.058 
என்ஜினியரிங் அஸிஸ்டண்ட் (டிராக் மிஷின்) - 799 
டிராக் மெயிண்டர்ன் (குரூப் - 4)- 13,187
 βίοι ει (P-Way)-247 
மெக்கானிக்கல் அஸிஸ்டன் (C&W) -2,587 
அஸிஸ்டண்ட் லோகோ (Diesel) - 420 
அஸிஸ்டண்ட் (ஓர்க்-ஷாப் மெக்கானிக்கல்)-3077 
எலக்ட்ரிக்கல் அஸிஸ்டண்ட் டி.ஆர்டி 1,381 
அஸிஸ்டன் லோகோ (எலக்ட்ரிக்கல்) - 950 
அஸிஸ்டன் ஆபரேஷன்ஸ் (எலக்ட்ரிக்கல்)-744 
உள்பட மொத்தம் 32,438 பணியிடங்கள் உள்ளன. 

கல்வித் தகுதி: 
10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது தேசிய அப்ரெண்ட்டீஸ் சான்றிதழ் வைத்து இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும். 

வயது வரம்பை பொறுத்தவரை ஜனவரி 1, 2025 தேதிப்படி 18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை: 4 கட்ட தேர்வு முறைகள் உள்ளன. கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். 

விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். 
தேர்வு எழுதிய பிறகு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டனம் ரூ.250 ஆகும். தேர்வு எழுதி பிறகு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும். அவகாசம் நீட்டிப்பு: 

ரயில்வேயில் உள்ள குரூப் டி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் நேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட தேதியின் படி விண்ணப்பிக்க வரும் மார்ச் 3, 2025 கடைசி நாளாகும்.


No comments:

Post a Comment