கற்றலில்
அணுகல் ஆராய்ச்சி மையம், ஐ.ஐ.டி., மெட்ராஸ் மற்றும் தமிழ்நாடு அறிவியல், தொழில்
நுட்ப மையம், இணைந்து, அறிவியல் சார்ந்த ஒலி வடித்தல் போட்டியை நடத்த வுள்ளது.
இப்போட்டியில், 6 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற் கலாம். ஒலி
வாயிலாக அறிவியல் கருத்தை ஆக்கப்பூர் வமாக விளக்க இசை, இயற்கை ஒலிகள் அல் லது
அன்றாட பொருட் களைப் பயன்படுத்தலாம்.
மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழுவை
உருவாக்கி, மாணவர்களின் கண்டு பிடிப்புகளை வெளிப் படுத்தும், 25 நிமிட ஆடியோ கோப்பு
களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான போட்டி சென்னை, கோட்டூர்பு ரத்தில் உள்ள
பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையத்தில், வரும் மார்ச் 7ம் தேதி காலை 9:00
மணிக்கு நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறு வோருக்கு முதல் பரிசு, 50,000
ரூபாயுடன் அறிவியல் விருது வழங்கப்படும். இரண்டாம் பரிசாக, 20,000 ரூபாய் வழங்
கப்படும். போட்டியில் பங் கேற்க விருப்பமுள் ளோர் வரும் 25 தேதிக்குள் விண் ணப்பம்
சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விவ ரங்கள், ஒலி வடிவ மைப்பு மாதிரிகளுக்கு 0442557
5638 என்ற தொலைபேசி எண் மற்றும் https://thearc.iitm.ac.in/sound_sculpting_event.html என்ற இணையதள முகவரி யில் தொடர்பு கொள் ளலாம்.
No comments:
Post a Comment