பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம்
3-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வை மாணவ-மாணவிகள் பேப்பர்-பேனா முறையில் எழுதி
வருகின்றனர். இந்த நிலையில் பிளஸ்-2 படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் ஆனந்த் கணினி
வழியில் பொதுத்தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து அரசிடம் கோரிக்கை விடுத்து
இருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று வாசிப்பாளர் உதவியுடன் கணினி வாயிலாக
பொதுத்தேர்வை எழுத தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
அந்தவகையில் கணினி வழியாக பொதுத்தேர்வு எழுதும் முதல் மாணவர் என்ற பெருமையை அந்த
மாணவர் பெற்றுள்ளார். இனி வரும் காலங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாமாக
பொதுத்தேர்வு எழுதுவதற்கான ஒரு முன்மாதிரி நிகழ்வாக இது அமைந்துள்ளது.
கணினி வாயிலாக பொதுத்தேர்வு எழுதும் முதல் மாணவர்
No comments:
Post a Comment