பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வை, எந்த புகாருக்கும் இட மளிக்காமல் சிறப்பாக நடத்தி
முடிக்க, அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தர விட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 28 முதல் ஏப்., 15ம் தேதி வரை நடக்கி றது. முன்னதாக,
வரும், 22 முதல் 28ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறை தேர்வு நடக்கிறது. செய்முறை
தேர்வு முடிந்த பின், அனைத்து பள்ளிகளில் இருந்தும், மதிப்பெண் பட்டியல் களை மார்ச்
4க்குள், சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் உதவி இயக் குனரிடம் ஒப்படைக்க, மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அனைத்து பள்ளி களில்
இருந்தும், மாண வர்களின் மதிப்பெண் பட்டியல் பெற்றவுடன், மாவட்ட அரசு தேர் வுகள்
உதவி இயக்கு னர்கள் அலுவலகம் வாயிலாக, www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில்,
பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து மாண வர்களின், செய்முறை
தேர்வு மதிப்பெண் களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என, அரசு தேர்வுகள் உதவி
இயக்குனர் உறுதி செய்ய வேண்டும். ஒரு மாணவர் விபரம் கூட விடுபடக்கூடாது.
செய்முறை
தேர்வை, எந்தவொரு புகாருக்கும் இடமளிக் காமல் சிறப்பாக நடத்த, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்கள், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர்கள் நடவ டிக்கை எடுக்குமாறு, அரசு
தேர்வுகள் இயக் குனர் லதா உத்தர விட்டுள்ளார்.
No comments:
Post a Comment