கியூட் தேர்வு அவகாசம் நீட்டிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 4 February 2025

கியூட் தேர்வு அவகாசம் நீட்டிப்பு

கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேசிய தேர்வு முகமை, வரும் 8ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது. நாட்டில் உள்ள மத்திய பல்கலைகளில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நடத்தும், கியூட் என்ற பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும். அடுத்த மாதம் நடக்க உள்ள இந்த தேர்வில் பங்கேற்க, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று வெளியான அறிவிப்பில், மாணவர்களும், கல்வி நிறுவனங்களும் விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ளதால் அவகாசம் கோரின. இதையடுத்து, வரும் 8ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment