அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட போட்டிகள்
சென்னை, பிப். 4: தமிழகத்தில் அரசுப்
பள்ளிகளில் மாணவர் களுக்கான சிறார் திரைப்பட போட்டிகள் பிப்.7 முதல் நடை
பெறவுள்ளதாக பள்ளிக் கல்விக் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்
துறை இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப் பட்ட
சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் மாதந் தோறும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும்
மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப் பட்டு வருகிறது.
அந்தவகை யில் நடப்பு
கல்வியாண்டில் (2024-25) நவம்பர். டிசம்பர் மற் றும் ஜனவரி மாதங்களுக்கான சிறார்
திரைப்படங்கள் மாண வர்களுக்கு ஒளிபரப்பப்பட் இதையடுத்து சிறார் திரைப்ப டம் சார்ந்த
போட்டிகள் பள்ளி, வட்டார. மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட வுள்ளன. கதை,
வசனம் எழுதுதல், நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும்.
அதன்படி பள்ளி அளவில் பிப். 7-ஆம் தேதியும். வட்டார அளவில் பிப்.13-ஆம் தேதியும்,
மாவட்ட அளவில் பிப்.20-ஆம் தேதியும் போட்டி கள் நடத்தப்படும். பள்ளி அளவிலான போட்டி
களில் அனைத்து மாணவர்க ளும் பங்குபெறும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள
வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகள்: இதற்கான வழிகாட்டு நெறிமு றைகள்
வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் வட்டார மற் னும் மாவட்ட அளவிலான போட்டிகளை
நடத்தும்போது அனுபவம் வாய்ந்த நடுவர்களை கொண்டு போட்டிகளை நடத்த வேண்டும்.
இதுதவிர
போட்டிகள் குறித்த விவரங்களை முந்தைய தினத் தன்று மட்டுமே மாணவர்க ளுக்கு
தெரிவித்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் முன் கூட்டியே தெரிவிக்கக்கூடாது என்பன
உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றை பின்பற்றி போட்டி களை சிறந்த முறையில்
நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment