தேர்ச்சி சதவீதம் குறைவான பள்ளிகளை கண்காணிக்க அரசு மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் நியமனம் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 6 February 2025

தேர்ச்சி சதவீதம் குறைவான பள்ளிகளை கண்காணிக்க அரசு மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் நியமனம்

தேர்ச்சி சதவீதம் குறைவான பள்ளிகளை கண்காணிக்க அரசு மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் நியமனம் 

குறைவாக தேர்ச்சி சதவீதம் உள்ள அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வகையில், அரசுத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு, பிளஸ் 2விற்கு, வரும் மார்ச், 3, பிளஸ் 1 வகுப்பிற்கு, மார்ச், 5, பத்தாம் வகுப் பிற்கு, மார்ச், 28 ல் தொடங்குகிறது. முன்னதாக, வரும், 7ல், பிளஸ் 2 மாண வர்களுக்கும், 15ல், பிளஸ் 1 மாணவர் களுக்கும், செய்முறை தேர்வு துவங்கு கிறது. அரசு பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, பள்ளிக்கல்வித்துறையினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வகையில், ஆலோசனை வழங்கவும், அரசுத்துறை மற்றும் கல் வித்துறையில் அலுவலர்களை கண் காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள், ஒன்றியத்திற்கு உட் பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ 2 மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள அனைத்து பள் ளிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து, மாணவர்கள் மற்றும் ஆசி ரியர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவதுடன், தொடர்ந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். நாமக்கல் கலெக்டர் உமா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் உத்தர வின்படி, தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க தகுந்த ஆலோ சனை வழங்க வேண்டும் என அறிவு றுத்தலின்படி, மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி நேற்று ஆய்வு மேற் கொண்டார். 

அப்போது, தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் மாணிக்கம், உதவி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment