தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதித் தேர்வாக மாநில அரசு, மாநில தகுதித் தேர்வு (செட்) நடத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (செட்) நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில தகுதித் தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 6,7,8 மற்றும் 9-ந்தேதிகளில் கணினி வாயிலாக நடத்தப்பட உள்ளது. இதற்காக மார்ச் மாதம் 3-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான நுழைவுச் சீட்டை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பு பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணிக்கான
‘செட்’ தகுதித் தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதி தொடக்கம்
அமைச்சர் கோவி.செழியன் தகவல்
No comments:
Post a Comment