டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை - EDUNTZ

Latest

Search Here!

Friday, 21 February 2025

டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை

டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை

 டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026-ஆம் பருவத்தில் மாணவர்கள் சேர்வதற்கான தேர்வு 01.06.2025-ல் நடைபெறவுள்ளது. அதன் விபரங்கள் அடங்கிய முழு தொகுப்பு WWW.RIMC. GOV.IN என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை- 600 003 என்ற முகவரிக்கு மார்ச்.31 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும்.

 01.01.2026 அன்று 11.5 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது 02.01.2013-க்கு முன்னதாகவும் 01.07.2014-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது.
 இந்த வயது வரம்பில் எந்த தளர்வும் கிடையாது என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment