மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்,
சென்னை-06. 5.5.6.2283/01/2024 . 19.02.2025. பொருள் 1 :
பள்ளிக்கல்வி அரசு
பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியினை
வழங்குதல் கட்டகங்கள் தயாரித்தல் பணிமனை நடத்துதல் - பங்கேற்கும் முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கு தேர்வு பணியிலிருந்து விலக்களிக்க மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலர்களுக்கு அறிவுறுத்துதல் தொடர்பாக.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கு நேரடியாக திறன்வளர் பயிற்சியினை வழங்கிடும் பொருட்டு கட்டகம்
தயாரித்தல் பணி 17.03.2025 முதல் 28.03.2025 முடிய மேற்கொள்ளவேண்டியுள்ளது. இதனை
தொடர்ந்து அடுத்த கட்ட பணிமனை நடைபெறவுள்ளது. ஆசிரியர்கள் தங்களுக்கு உரிய
பாடப்புத்தகங்களை உடன் எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பங்கேற்பாளர்களுக்கு தங்கும் இட வசதி மற்றும் உணவு போன்றன சென்னை-ஆஷா நிவாசில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இணைப்பில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை
தேர்வு பணியிலிருந்து விலக்களித்து உரிய நாட்களில் பணிமனையில் பங்குபெற ஏதுவாக
பணியிலிருந்து விடுவிக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு:
No comments:
Post a Comment