பார்வையில் காணும் கடிதத்தின்படி மாணவர்கள் தங்கள் பாடபுத்தகங்களுக்கு அப்பால்
சென்று காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திட HDFC ERGO நிறுவனம்
செயல்படுகிறது. காப்பீடு நிறுவனத்தால் ஜீனியர் வினாடி - வினா போட்டிகள் 2016 -ஆம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது தமிழகத்திலுள்ள பள்ளி மாணவர்களும்
பங்கு பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசு பள்ளிகளில் பயிலும் 8,9-ம்
வகுப்பு மாணவர்கள் தகுதியுடையவர்களாவர். ஆரம்ப சுற்று பிப்ரவரி மாதம் இறுதி
வாரத்திலும் (Online) மூலமும், மண்டல சுற்று மார்ச் மாதம் முதல் வாரத்திலும் (Zoom)
மூலமும் நடைபெறுவதாகவும் கிராண்ட் ஸ்டேட் பைனல் சென்னையில் நேரில் நடக்கும் நிகழ்வு
மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு
பள்ளியும் 1 முதல் 3 குழுக்களை பதிவு செய்திடலாம். இதனை சார்ந்து பெறப்பட்ட கடிதம்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இணைப்பு: கடித
நகல்
No comments:
Post a Comment