நாளை முதல் மூன்று நாட்கள் மாநில தகுதி (செட்) தேர்வு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 5 March 2025

நாளை முதல் மூன்று நாட்கள் மாநில தகுதி (செட்) தேர்வு

நாளை முதல் மூன்று நாட்கள் மாநில தகுதி (செட்) தேர்வு 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், மாநில தகுதி தேர்வு (செட்) நாளை, (6ம் தேதி) முதல், 8ம் தேதி வரை நடக்கிறது. கரூர் மாவட்டத்தில் கணினிவழி தேர்வு, கரூர் மணல்மேடு என்.எஸ். எம். பொறியியல் கல்லுாரி, ஆச்சிமங்கலம் ஸ்ரீமீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பாக, தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. நுழைவுச்சீட்டு, ஆளறியும் அடையாள அட்டை, (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு இவற்றில் ஏதேனும் ஒன்று அவசியம் எடுத்து வர வேண்டும்.)

தேர்வுக்கு காலை, 7:30 முதல், 8:30 மணிக்குள் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். 8:30 மணிக்கு மேல் வருகை புரிபவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு நேரம் காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கும். மதியம் தேர்வு எழுதுபவர்கள் பிற்பகல், 12:30 முதல், 1:30 மணி வரைவருகை பதிவு செய்ய வேண்டும். தேர்வு பிற்பகல், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கல்லுாரிகள் மற்றும் பல்கலை கழகங்களில், உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு, நெட் அல்லது செட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment