கல்லூரிகளில் அதிக விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் யார்? விவரங்கள் கேட்டது கல்லூரி கல்வி இயக்ககம் 


கொரோனா நோய் தொற்று இருந்த காரணத்தினால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா தாக்கம் சற்று குறைந்திருந்ததால் கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டன. இதையடுத்து மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கல்லூரிகளுக்கு வர தொடங்கினர். இந்த நிலையில் கல்லூரிகளில் அதிக விடுமுறை எடுத்த பேராசிரியர்களின் பட்டியலை கல்லூரி கல்வி இயக்ககம் கேட்டு இருக்கிறது. 

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் மருத்துவ விடுப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக சிறப்பு தற்செயல் விடுப்பு தவிர அதிகமாக விடுப்பு எடுப்பவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாக பணிகளை முதல்வர் அறிவுறுத்தியும் செயல்படாமல் இருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் விவரங்கள் பட்டியலை உடனே அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!