தெரிந்துகொள்வோம் : அதீத (அசதி) சோர்வுக்கான தீர்வு என்ன? 


பொதுவாக ஒரு மனிதனுக்கு அசதி ஏற்பட்டால், சிறிது நேரம் தூங்கினால் சரியாகும். ஆனால், ஒரு வகையான அதீத அசதி தூங்கினாலும் சரியாகாது. இதற்கு சரியான காரணம் தெரியவில்லை என்றே நவீன மருத்துவம் கூறுகிறது. 

ஒரு சில வைரஸ்கள் இதற்கு காரணமாக இருக்கும் என்பது மருத்துவர்களின் நம்பிக்கை. மன அழுத்தம், குடும்பச் சூழ்நிலை, வேலையில் விருப்பமின்மை போன்ற காரணங்களாலும் இந்த வகையான அசதி ஏற்படலாம். 30 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இந்த வகையான அசதி அதிகமாக வருகிறது. புளூ காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளே இதில் தெரிகின்றன. 

தசை வலி, தலைவலி, அதீத சோர்வு போன்றவை 6 மாதங்களுக்கு மேல் இதில் நீடித்திருக்கலாம். உடற்பயிற்சி செய்தாலும் சோர்வுவரும். காலை எழுந்தவுடன் அசதியாக காணப்படும். மறதி ஏற்படும், மனதின் ஒருமுகத்தன்மை குறையும், குழப்பம் வரும், மூட்டு வலி வரும் ஆனால் வீங்காது, சிவக்காது. ஒரு சிலருக்கு தொண்டை வலி வந்து பார்த்திருக்கிறேன். இந்த வகை அசதிக்கு என சிறப்பு பரிசோதனைகள் ஒன்றும் இல்லை. நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, தைராய்டு, கொழுப்பு போன்ற பரிசோதனைகளே இதற்கும் செய்யப்படுகின்றன. தைராய்டு, இதயம், சிறுநீரகம் சரியாக இயங்குகிறதா, மனச் சோக நோய் உள்ளதா, ஏதாவது கட்டிகள் உள்ளனவா எனப் பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும். 

இவர்களுக்கு வாதத்தை தணிக்கிற சிகிச்சைகள் முக்கியமானவை. இலகுவான கஞ்சி வகைகளில் சுக்கு சேர்த்துக் கொடுக்கலாம். தூங்குவதற்கு முன் தலைக்கும், காலுக்கும் கொம்பரக்கு எண்ணெய் தேய்த்த பின் தூங்கலாம். தலையில் எண்ணெய் ஊற்றும் தாரை சிகிச்சை செய்ய வேண்டும். சிற்றரத்தை, குறுந்தட்டி, நாயுருவி, அஸ்வகந்தா போன்ற கசாயங்களைக் கொடுத்து அலுப்பைக் குறைக்க வேண்டும். 

தாளிசபத்திரி மாத்திரை பசியைக் குறைத்துக் காய்ச்சலைக் குறைக்கும். மிகை அசதியால் சோர்வாக இருப்பவர்கள் மெதுவாக வேலை செய்ய வேண்டும். வேலையையும், ஓய்வையும், தூக்கத்தையும் முறைப்படுத்தவேண்டும். ஒரு பெரிய வேலையை, சிறிது சிறிதாகப் பிரித்துச் செய்வதற்குப் பழக வேண்டும். யோகா, தியானம் செய்ய வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்து வெளிவிடுவது மிகவும் நல்லது.

Post a Comment

أحدث أقدم

Search here!