அரசு உண்டு உறைவிடப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 


தருமபுரியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு பழங்குடி இனத்தைச் சேர்ந்த தகுதியானவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில், அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

இப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பழங்குடி இனத்தைச் சேர்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தொகுப்பூதியமாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9 ஆயிரம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் கல்வி ஆண்டு முடியும் வரை வழங்கப்படும் அல்லது காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியர்களை கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை ஊதியம் வழங்கப்படும். 

 விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, வகுப்பு நடத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். விண்ணப்பங்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட பழங்குடியினர் அலுவலகத்தில் வரும் 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

أحدث أقدم

Search here!