அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு திறன் அட்டைகள்  வழங்குதல் (Smart Card) - அரசாணை வெளியீடு



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் அச்சிடப்பட்டு மற்றும் உடன் சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலக முகவரிக்கு 30 11 2020 முதல் அனுப்பப்பட்டு வருகிறது. திறன் அட்டைகள் (Lanyard and Card Holder)   வழங்குவது சார்பாக கீழ்கண்ட அறிவுரையை பின்பற்றிடுமாறு  சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 

1. முதன்மைக் கல்வி அலுவலர்கள் திறனட்டைக் பெறப்பட்டன அதில் உள்ள எண்ணிக்கையை உறுதி செய்து பின்னர் 24 மணி நேரத்திற்குள் தங்கள் நிர்வாக வரம்பிற்குட்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் 

2. அதனை தொடர்ந்து திறன் அட்டைகள் மற்றும் அதற்கான உபபொருள்கள் (Lanyard and Card Holder) பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதல் கடிதம் மற்றும் பெறப்பட்ட எண்ணிக்கை முதலான விவரங்களையும் இணைப்பில் உள்ள படிவத்தின் படி சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் நேரில் வழங்கிட வேண்டும். 

3. மாவட்ட கல்வி அலுவலர்கள் தம் நிர்வாக வரம்பிற்கு உட்பட்ட அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை நேரில் வரவழைத்து சார்ந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (Lanyard and Card Holder)உடன் ஒப்படைத்து அதற்கான ஒப்புதல் கடிதங்களைத் தொகுத்து அறிக்கையாக சார்ந்த முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

4. முதன்மை கல்வி அலுவலர்கள் தம் நிர்வாக வரம்பிற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புதல் கடிதங்களை தொகுத்து வருவாய் மாவட்ட அளவிலான அறிக்கையினை இணை இயக்குனர் அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு விரைவு அஞ்சல் அல்லது தூதஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும். 

5. வருவாய் மாவட்ட அளவிலான தொகுப்பு அறிக்கையினை சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்திசெய்து கையொப்பம் இட்டு அனுப்பப்படவேண்டும். 

மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி உடனுக்குடன் பணிகளை முடிக்கப்பட வேண்டும் எனவும் இதில் சுனக்கம் ஏதும்  கூடாது எனவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது.













Post a Comment

أحدث أقدم

Search here!