மாவட்ட கல்வி அலுவலர்கள் , முதன்மைக் கல்வி அலுவலராக தற்காலிக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு GO NO : 122, DATE : 15-12-2020 
சுருக்கம் 

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - காலிப் பணியிடங்களை நிரப்புதல் - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. 

பள்ளிக் கல்வித்துறை 

அரசாணை (நிலை) எண்.122 
நாள் : 15.12.2020) 
திருவள்ளுவர் ஆண்டு 2051, 
சார்வரி, கார்த்திகை -30. 
படிக்கப்பட்டவை : 

1. அரசாணை (நிலை) எண்.22, பள்ளிக் கல்வி [பக1(1)த் துறை, நாள். 11.02.2020. 2. அரசாணை (நிலை) எண்.50, பள்ளிக் கல்வி [பக1(1)]த் துறை, நாள். 28.05.2020. 3. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.4315/«/இ1/2020, நாள் 24.10.2020 மற்றும் 09.12.2020. 

ஆணை:- 

மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவின் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III-ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் தற்போது காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி வகுப்பு IV-ஐச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் பணி முதுநிலையில் முந்துரிமையில் உள்ள கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் விதி 6(1)-ன்படி மாவட்டக் கல்வி அலுவலர் பணி நிலையில் மூன்று ஆண்டு கால பணிக்காலத்தை நிறைவு செய்யாததால், அவர்கள் பொருட்டு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் விதி 6(1)-க்குத் தளர்வு அளித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 பிரிவு 47(1)-இன்கீழ் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பதவிகளுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்து, அவர்கள் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களில் பணி அமர்த்தி அரசு ஆணையிடுகிறது. கீழ்கண்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் இத்தற்காலிக பதவியுயர்வு பின்வரும் காலத்தில் முன்னுரிமைக் கோரும் உரிமையை அவர்களுக்கு அளிக்காது என்ற நிபந்தனைக்குட்பட்டது. 









பெறுநர் 
பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை-6. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலகங்கள். (பள்ளிக் கல்வி இயக்குநர் வழியாக) பள்ளிக் கல்வி ஆணையர், சென்னை-6. 

மாநிலக் கணக்காயர், சென்னை-18. சிறப்பு ஆணையர் மற்றும் கரூவூல கணக்கு ஆணையர், சென்னை- 35. சம்பந்தப்பட்ட சம்பளக் கணக்கு அலுவலர்கள். சம்பந்தப்பட்ட மாவட்ட கரூவூல அலுவலர்கள். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள். 
நகல் பள்ளிக் கல்வித் துறையின் அனைத்துத் துறைத் தலைவர்கள், சென்னை-6/2. 

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலர்கள் / பிரிவுகள், சென்னை-9. 
பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் நேர்முக உதவியாளர், சென்னை-9. 
பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளரின் தனிச்செயலர், சென்னை-9. 
இருப்புக்கோப்பு உதிரி. 

// ஆணைப்படி அனுப்பப்படுகிறது // 

பிரிவு அலுவலர்

Post a Comment

أحدث أقدم

Search here!