ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் Ph.D பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு




வாய்மையே வெல்லும் 
தமிழ்நாடு அரசு 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் (Ph.D) மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம் 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர் - களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் www.tn.gov.in/forms/deptnamel1 என்ற இணையதள முகவரியில் யாவரும் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 01.02.2021 அன்று மாலை 5.45 மணிக்குள், ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் எனில் 

“ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை, 
எழிலகம் இணைப்புக் கட்டடம், 
சேப்பாக்கம், 
சென்னை- 600 005” என்ற முகவரிக்கும்,
 
பழங்குடியினர் மாணாக்கர்கள் எனில் 

"இயக்குநர், 
பழங்குடியினர் நலத்துறை, 
எழிலகம் இணைப்புக் கட்டடம், 
சேப்பாக்கம், 
சென்னை- 600 005” என்ற முகவரிக்கும், வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். 

மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. 

செ.ம.தொ.இ/1264/வரைகலை/2020 ஆதிதிராவிடர் நல ஆணையர்.

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم

Search here!