நீதிமன்ற வழக்கு வாபசானால் 10 ஆயிரம் பேருக்கு வேலை


 ''சுமுக தீர்வு ஏற்பட்டால், 10 ஆயிரம் பேருக்கு 'கேங்மேன்' பணி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி கூறினார். 

 நாமக்கல் அடுத்த, புதுச்சத்திரம் ஒன்றியத்தில், 'மினி கிளினிக்'கை திறந்து வைத்த அவர் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்திற்கு, 53 மினி கிளினிக்குகள், ஆறு நடமாடும் கிளினிக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், 18 கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. கொல்லிமலை பகுதியிலும், மினி கிளினிக் திறக்கப்படுகிறது. மின் வாரியத்தில், கேங்மேன் பணியை பொறுத்தவரை, மூன்று நாட்களுக்கு முன், அனைத்து தொழிற்சங்கத்தையும் அழைத்து பேசியுள்ளேன். வேறு எந்த கோரிக்கையானாலும், பேசி தீர்த்துக் கொள்ளலாம். இது, 10 ஆயிரம் பேரின் குடும்பத்தின் நிலைமை. அதனால், நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறுங்கள். பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுத்த பின், எந்தப் பிரச்னையானாலும் பேசிக் கொள்ளலாம் என்றேன். அவர்களும் சம்மதித்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு வரும் போது, அந்த மனுவை தாக்கல் செய்வதாக தெரிவித்துஉள்ளனர். சுமுகமாக தீர்வு ஏற்பட்டால், 10 ஆயிரம் பேருக்கு கேங்மேன் பணி வழங்குவதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

أحدث أقدم

Search here!