21... 21... 21... : டுவிட்டரில் டிரெண்டிங் : 


டுவிட்டரில் ஒவ்வொரு நாளும் பல விஷயங்கள் டிரெண்ட் ஆகின்றன. அந்தவகையில் இன்றைய தேதியான 21.01.2021ஐ, 21ம் தேதி, 21வது ஆண்டு, 21ம் நூற்றாண்டு என டிரெண்ட் செய்து வருகின்றனர். வருடத்தில் எப்போதாவது தேதி, மாதம், ஆண்டு என ஒன்றாக வரும். சில சமயம் ஆண்டு தொடங்கி தேதி வரை ஒன்றாக வரும். இதை சமூகவலைதள வாசிகள் அவ்வப்போது சுட்டிக்காட்டி அதை வைரல் ஆக்குவார்கள். அந்தவகையில் இன்றைய தேதியும் வைலராகி உள்ளது. தற்போது நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம். அதோடு இன்றைய தேதி 21, மற்றும் ஆண்டு 2021, இதை சுருக்கமாக 21 என கூறி வருகிறோம். ஆகவே இன்றைய தினம் தேதி, ஆண்டு, மற்றும் நூற்றாண்டு ஆகியவை 21 என்ற எண்ணில் வந்துள்ளது. இதை குறிப்பிட்டு சமூகவலைதளமான டுவிட்டரில் "21st Century", "Today is the 21st" ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின. இன்றைய தினம் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் பிறந்த தினமும் கூட. இதையும் சுட்டிக்காட்டி இந்த ஹேஷ்டாக்குகளில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதோடு சுஷாந்த் சிங் பிறந்தநாள் #SushantDay, #ssrbirthday ஆகிய ஹேஷ்டாக்குகளிலும் தேசிய அளவில் டாப்பில் டிரெண்ட் ஆனது. ''இன்றைய தினத்தை கவனித்தீர்களா. 21ம் நாள், 21ம் ஆண்டு, 21ம் நூற்றாண்டு. அதோடு நமது அன்பிற்குரிய மறைந்த சுஷாந்த் சிங்கின் பிறந்த தினமும் இன்று''. ''என்ன ஒரு அற்புதமான நாள். சுஷாந்த் பிறந்தநாளில் இந்த அற்புத நாள் வந்துள்ளது மகிழ்ச்சி''. ''இன்றைய நாள் நமது வாழ்வின் மிகவும் தனித்துவமான நாள்'' என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் இப்படி ஒரு தினம் வந்ததால் என்ன நடந்தது, இதுவும் வழக்கமான ஒரு நாள் தான், இதை கொண்டாட ஒன்றும் இல்லை என சிலர் எதிர் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Post a Comment

أحدث أقدم

Search here!