தெரிந்து கொள்வோம் : "காரில் பிரேக் பிடிக்கவில்லையா". உடனே என்ன செய்யவேண்டும்.? 


 காரில் பிரேக் சரியாக வேலை செய்யாமல் விபத்துக்கள் இன்று அதிகளவில் ஏற்படுகிறது. நீங்கள் அதிவேகமாக சென்றுக் கொண்டிருக்கும் போது உங்கள் காரின் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். 

 உங்கள் காரில் பிரேக் சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிந்ததும் சுற்றியுள்ள விளக்குகளை எரியவிட்டு அருகில் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும். மேலும் இவ்வாறு செய்யும் போது காரின் பேட்டரியில் இருந்து அதிக திறன் வெளியேற்றப்படும். மேலும், இந்தத் தருணத்தில் நீங்கள் பதற்றப்படாமல் நிதனமாக செயல்பட வேண்டும். உங்கள் கார் அதிவேகமாக செல்லும் போது மெல்ல மெல்ல அதன் வேகத்தைக் குறைக்கவேண்டும். ஆக்சிலேட்டரை பயன்படுத்தாமல் கிளெட்சை மட்டும் தொடர்ந்து பயன்படுத்துங்கள். ஐந்தாவது கியரில் கார் சென்றுக் கொண்டிருந்தால் வெல்ல ஒவ்வொரு கியராக குறைக்கவேண்டும். குறைத்து பின்னர் ரிவர்ஸ் கியருக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்யும் போது பிரேக்கை தொடர்ந்து அழுத்த வேண்டும். காரின் வேகம் குறைந்த போது பிரேக் வேலை செய்ய ஆரம்பிக்கும். இல்லையெனில் பாதுகாப்பான ஓடுதளத்திற்குச் சென்று அருகே மணல் பரப்பு ஏதும் இருந்தால் அங்கு காரை விடவும், அது வேகத்தை கட்டுப்படுத்தும். பின்னர் உங்கள் கார் 40 கிமீ வேகத்திற்கு குறைவாக வந்ததும் ஹேண்ட் பிரக்கைப் பயன்படுத்தி காரை நிறுத்தவும். இந்த தருணத்தில் நீங்கள் உங்களது நிதானத்தை இழந்தால் நிச்சயம் விபத்து ஏற்படும்.

Post a Comment

أحدث أقدم

Search here!