சென்னை-6.
ந.க.எண்.045391/எம்/இ2/2020,நாள் 23.01.2020
பொருள்: பள்ளிக் கல்வி - 72-வது இந்திய குடியரசு தினவிழா - 26.01.2021 -
அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் தேசிய
கொடியினை ஏற்றி கொண்டாடுதல்-தொடர்பாக.
பார்வை:
1. சென்னை -9, தலைமைச் செயலகம் பொதுத்துறை, அரசு
துணைச் செயலாளர் அவர்களது கடிதம் எண்.30200/பொது1/2020,
நாள்.06.10.2020 மற்றும் 10.11.2020
2. சென்னை-9, தலைமைச் செயலகம், பள்ளிக்கல்வித்துறை, அரசு
துணைச் செயலாளர் அவர்களது கடிதம் எண். 17703/ பொது1(2)/
2020,நாள்.21.10.2020
நமது இந்திய திருநாட்டின் 72-வது குடியரசு தினவிழா 26.01.2021 அன்று
(செவ்வாய் கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து,
அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக்
கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்துப் பள்ளிகள் / கல்வி
அலுவலகங்களில் தேசியக்கொடியினை ஏற்றி, விழாவினை, கோவிட்-19 சார்பான
தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில்
சிறப்பாக கொண்டாடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்/
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.
إرسال تعليق