JIO Mart ‘ரிலையன்ஸ் ஜியோமார்ட்' 4 நாள் தள்ளுபடி விற்பனை குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம் 


 ரிலையன்ஸ் ஜியோமார்ட்'-ன் 4 நாள் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம். ‘ரிலையன்ஸ் ஜியோமார்ட்’ ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் ஆன்-லைன் வர்த்தக சேவை இந்தியாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் உணவுப்பொருட்கள், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ரிலையன்ஸ் ஜியோமார்ட் சார்பில் ‘புல் பைசா வசூல் சேல் - 2021' எனும் கொண்டாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை 4 நாட்கள் வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி மேற்கண்ட நாட்களில் காய்கறி-பழங்கள், உணவு பொருட்கள், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் அதிரடி சலுகையில் பெறலாம். ‘டெலிவரி' கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் எத்தனை பொருட்களை வேண்டுமானாலும் தேர்வு செய்ய முடியும். இதில் எந்த வரைமுறையும் கிடையாது என்பது கூடுதல் அம்சமாகும். தள்ளுபடி விற்பனை ‘புல் பைசா வசூல் சேல் - 2021' எனும் கொண்டாட்டத்தின் 4 நாட்கள் தள்ளுபடி விற்பனை, நிச்சயமாக குடும்பத்தலைவிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மளிகை பொருட்களை சலுகை விலையில் வாங்க குடும்பத்தலைவிகள் நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர குளிர்பானங்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், உலர் தானியங்கள், ஷாம்புக்கள், சோப்புகள், மசாலா பாக்கெட்டுகளுக்கு அதிரடி சலுகைகளும் அறிவிக்கப்பட இருக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் வர்த்தக சேவையின் ‘புல் பைசா வசூல் சேல் - 2021' எனும் கொண்டாட்டத்தின் விளம்பர தூதராக நடிகை ராஷ்மி தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகவல் ரிலையன்ஸ் ஜியோமார்ட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!