உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் 10 ஆவது முறையாக நீட்டிப்பு 


 உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலத்தை வருகிற ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. இதுதொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இதனை வருகிற 2021 ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. இதுதொடர்பான மசோதாவை மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். தற்போது 10 ஆவது முறையாக பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

أحدث أقدم

Search here!