ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி; முதல்வர் பழனிசாமி அதிரடி


 சென்னை: கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,100 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று (பிப்.,05) கூடிய சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி, சட்டசபை விதி 110ன் கீழ் விவசாய கடன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் கூறினார்.மேலும் அவர் கூறுகையில், ‛வேளாண்துறைக்கு அதிமுக அரசு முக்கயத்துவம் அளித்து வருகிறது. பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். கொரோனா, புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த அதிமுக அரசு சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்,' எனக் கூறினார். இதற்கு முன்னதாக கடந்த 2016ல் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை தமிழக அரசு ரத்து செய்திருந்தது.

Post a Comment

أحدث أقدم

Search here!