நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: 


பிப்.14-ல் தேர்வு மத்திய அரசின் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நடத்தும் நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் நிஃப்ட் எனப்படும் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technology) செயல்படுகிறது. இந்தக் கல்வி நிறுவனங்களில் இளங்கலை ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் இளங்கலை வடிவமைப்பு உள்ளிட்ட ஏராளமான படிப்புகளைப் படிக்கலாம். மத்திய அரசின் நிஃப்ட் கல்வி நிறுவனங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உட்பட நாட்டின் 16 முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. 

இந்தக் கல்வி நிறுவனங்களில் உள்ள 2,370 இடங்களுக்காக, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு 2021 பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் இதற்காக 32 இடங்களில் தேர்வு மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. காகிதத் தாளில் நடைபெற உள்ள இத்தேர்வில் கலந்துகொள்ள மாணவர்கள் கரோனா நெகட்டிவ் சான்றிதழைக் கொண்டு வர வேண்டியது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.' பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும், பொறியியல் பட்டயப் படிப்பு முடித்தவர்களும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 23-க்கு உட்பட்டிருக்க வேண்டும். நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்ய: https://applyadmission.net/nift2021/NIFT_AdmitCard_2021.asp நிஃப்ட் நுழைவுத் தேர்வு மொத்தம் இரண்டு பிரிவுகளாக நிஃப்ட் படைப்பாற்றல் திறன் தேர்வு (NIFT CAT) மற்றும் நிஃப்ட் பொதுத் திறன் தேர்வு (NIFT GAT) என நடைபெறும். அனைத்து இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு பொதுத் திறன் தேர்வு கட்டாயம். இளங்கலை மற்றும் முதுகலை வடிவமைப்பு (B.Des, M.Des) மாணவர்கள் இரண்டு தேர்வுகளையுமே எழுத வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

أحدث أقدم

Search here!