3rd Economic Class புதிய 3ம் பொருளாதார வகுப்பு ரயில் பெட்டிகள் : சிறப்பம்சங்கள் என்ன ? 




தற்போதுள்ள 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகளின் மறுவடிவமைப்பாகத் தான் முன்மாதிரி வந்துள்ளது. பிப்ரவரி இந்த வார தொடக்கத்தில், லக்னோவில் செயல்படும் இந்திய ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு குறிப்பிட்ட தடங்களில் புதிய 3ம் பொருளாதார வகுப்பு ஏசி பெட்டிக்களுனான முன்மாதிரியை இறுதி செய்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் குளிரூட்டும் வசதிகள் மேற்கொள்ளப்படுவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதை தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு ரயில் பெட்டி தொழிற்சாலை (ஆர்.சி.எஃப்) கபூர்தலா, அரசுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 

 இந்தியாவில் லிங்கே ஹோஃப்மேன் புஷ் (Linke Hofmann Busch) வகை ரயில் பெட்டிகளை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய அந்நிறுவனம், ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்றுவதே வடிவமைப்பு தத்துவம் என்று தெரிவித்தது. 



 3ம் அடுக்கு ஏசி வகுப்புகள் தான் இந்திய ரயில்வே துறைக்கு அதிக லாபம் ஈட்டும் பயண வகுப்புகளாக உள்ளது. இந்த பயண வகுப்புகள் மிகவும் பிரபலமானது என்றும் கூறப்படுகிறது. எனவே, தற்போது அறிமுகப்படுத்தப்படும் 3ம்- ஏசி பொருளாதார வகுப்பு, சாதாரண பெட்டிகளுக்கு குளிரூட்டபட்ட வசதியை வழங்கும். 

எனவே, மக்களுக்கு ஏசி பயணத்தை மலிவான விலையில் கொண்டு செல்லும் “தரம் உயர்த்தப்பட்ட ஏசி அல்லாத வகுப்பு பெட்டிகள் என்பதைக் காட்டிலும், தற்போதுள்ள 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகளின் மறுவடிவமைப்பாகத் தான் முன்மாதிரி வந்துள்ளது. பிப்ரவரி இறுதிக்குள் தயாரிப்பு பணிகள் முழு மூச்சில் தொடங்கப்படும். அன்றாட மக்களுக்கு ‘விமானப் பயண’ அனுபவத்தை தருவதே இதன் இலக்கு, ”என்று கபுர்தலாவின் ஆர்.சி.எஃப் பொது மேலாளர் ரவீந்தர் குப்தா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார். 


ஆர்.சி.எஃப் நிறுவனம், 248 ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, ஒரு ரயில் பெட்டிக்கு 2.8- 3 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 3,ம் அடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகளை விட 10% அதிகம். அதிகமான பயணிகள் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுவதால், வருவாய் திறன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளையும் (Unreserved) மறுவடிவமைத்து, அதையும் குளிரூட்டபட்ட வகுப்பாக மாற்ற வேண்டும் என்பதே எங்களின் அடுத்த இலக்கு என்றும் தெரிவித்தார்.
வசதிகள்:
பெட்டியில் படுக்கைகளின் எண்ணிக்கை 72-ல் இருந்து 83 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. high-voltage electric switch gear என்ற தொழில்நுட்பம் மூலம் இது சாத்தியப்படுகிறது. ஆடம்பர கார்களைப் போல, ஒவ்வொரு பெர்த்திலும் தனிமனித ஏசி துவாரங்கள் பராமரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அகலமான கழிப்பறை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!