பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்திடுவீர் 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு 


பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 1969 வழி வகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். 




பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சோ, வாக்காளர் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஒட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற இன்றிமையாத ஒன்றாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 

12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரினை, பதினைந்து வருடங்களுக்குள் உரிய கால தாமதக் கட்டணம் செலுத்தி பதிவு செய்திடலாம். . 

திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000-ன் படி, 1.1.2000க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு 31.12.2014 வரை பெயர் பதிவு செய்திட வழி வகை செய்யப்பட்டது. மேற்கண்ட கால அளவு முடிவுற்ற பின்னும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31.12.2019 வரை குழந்தையின் பெயர் பதிவு செய்திட அரசு ஆணை பிறப்பித்தது. (தொடர்ந்துப் படிக்க PDF பைலை கிளிக் செய்யவும்)

You have to wait 25 seconds.

Download Timer

Post a Comment

أحدث أقدم

Search here!