தோட்டக்கலைத்துறையில் 991 பணி  (B.Sc  Agriculture & Diploma in horticulture)  

இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

  • வேளாண் அலுவலர் (365), 
  • உதவி வேளாண் அலுவலர் (122), 
  • உதவி தோட்டக்கலை அலுவலர் (307), 
  • தோட்டக்கலை உதவி இயக்குனர் (28), 
  • தோட்டக்கலை அலுவலர் (169) 

என மொத்தம் 991 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

வேளாண் அலுவலர் பதவிக்கு பி.எஸ்சி, வேளாண்மை படிப்பும், உதவி வேளாண் அலுவலர் பதவிக்கு 12-ம் வகுப்புடன் வேளாண் சார்ந்த 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும், உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 12-ம் வகுப்புடன் தோட்டக்கலை சார்ந்த 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல் தோட்டக்கலை உதவி இயக்குனர் பதவிக்கு தோட்டக்கலை, பழ அறிவியல், மலர் வளர்ப்பு, காய்கறி அறிவியல், மசாலா/மருத்துவ மற்றும் நறுமண செடி வளர்ப்பு இவற்றுள் ஏதாவதொரு முதுகலைப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 


தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு பி.எஸ்சி தோட்டக்கலை படிப்பு படித்திருக்க வேண்டும். எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-3-2021. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் விதம், விண்ணப்பிக்கும் வயது, அரசு விதிகளின்படி வயது தளர்வு, தேர்வு கட்டணம், தேர்வு மையங்கள் உள்பட விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை https://apply.tnpscexams.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Post a Comment

أحدث أقدم

Search here!