கால்நடை மருத்துவர் பதவிக்கு கவுன்சிலிங் - டி.என்.பி.எஸ்.சி.


உதவி கால்நடை மருத்துவர் பதவிக்கான கவுன்சிலிங் தேதியை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட உதவி கால்நடை மருத்துவர் பதவிக்கான கவுன்சிலிங், பிப்., 5, 6ம் தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்க உள்ளது. 

 தேர்வர்கள், தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டவாறு, கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும்.கவுன்சிலிங் நேர விபரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. உரிய காலத்தில் கலந்து கொள்ளாத தேர்வர்களுக்கு, மறுவாய்ப்பு அளிக்கப்படாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!