வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்துசெய்து அரசாணை வெளியீடு 


 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்ற வழக்குகளை ரத்துசெய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

 போராட்டம் இதுகுறித்து தலைமை செயலாளர் ராஜூவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: 

 சில அரசு பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 2019ம் ஆண்டு ஜனவரி 22ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சாலைமறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையே அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் போராட்டங்களை உடனடியாக கைவிட்டு மக்கள் பணிக்கு திரும்பும்படி முதல்அமைச்சர் கேட்டுக்கொண்டார். எனவே அனைவரும் 2019ம் ஆண்டு ஜனவரி 31ந்தேதி முதல் பணிக்கு திரும்பினர். ரத்துசெய்ய கோரிக்கை இந்தவேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிகைகள் மற்றும் குற்றவியல் வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் ஆகிய சங்கங்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 1ந்தேதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு மூலம், வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்ட அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுவதாக முதல்அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. அரசாணை வெளியீடு அதன் அடிப்படையில் சில உத்தரவுகளை அரசு பிறப்பிக்கிறது. 

அதன்படி, 2019ம் ஆண்டு ஜனவரி 22ந்தேதியில் இருந்து 30ந்தேதி வரை நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக கைவிடப்படுகின்றன. அந்த ஒழுங்கு நடவடிக்கைகளில் தண்டனை விதித்து இறுதி ஆணைகள் வெளியிடப்பட்ட நிகழ்வுகள் இருந்தால், அவை அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள்ள குற்றவியல் நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக கைவிடப்படுகின்றன. இதுதொடர்பாக காவல் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!