மாணவர்களுக்கு இலவச 'டேட்டா' அட்டை 


கல்லுாரி மாணவர்கள், 9.69 லட்சம் பேருக்கு, நான்கு மாதங்களுக்கு, தினமும், 2 ஜி.பி., 'டேட்டா' வழங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.கொரோனா தொற்று காரணமாக, கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தன. மாணவர்கள் நலனுக்காக, கல்வி நிறுவனங்கள், இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.இவற்றில் மாணவர்கள் பங்கு பெற வசதியாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள்.மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லுாரிகள் ஆகியவற்றில் படிக்கும், 9.69 லட்சம் மாணவர்கள், நான்கு மாதங்களுக்கு, தினமும், 2 ஜி.பி., டேட்டா பெற்றிட, 'எல்காட்' நிறுவனம் வழியே, இலவச டேட்டா அட்டைகள் வழங்கப்படும் என, ஜன., 8ல், முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, 'இலவச டேட்டா அட்டை' வழங்கும் திட்டத்தை, நேற்று தலைமை செயலகத்தில், ஒன்பது மாணவர்களுக்கு வழங்கி, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பழகன், உதயகுமார், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Post a Comment

أحدث أقدم

Search here!