அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை உத்தரவு 


 கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து வருகிற 8-ந் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வரும் சில பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வி துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சில தனியார் பள்ளி நிர்வாகம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்துவதில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும், சாதாரணமாக பள்ளிகள் எப்படி நடக்குமோ? அதேபோன்ற நிலைமையை கையாளுகிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன. எனவே அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் இதில் தனிக்கவனம் செலுத்தி, தங்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களிடம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!